என் நண்பர் ஒருவரின் இழைய சகோதரன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பி வந்து கிறுக்கியபோது .......
தற்கொலை:
வாழத் தெரியாதவர்களின் வாய்பாடு .
படைப்பதற்கு ஒருவன்
முடிப்பதற்கு ஒருவன் என
கடவுளையே நியமனம் செய்து
வாழ்கிறோம்.
உன் நுரையீரல் சேர்ந்த காற்றைக் கூட
சொந்தம் கொண்டாட முடியாத நிலையில்,
ஒருநாள் பிரிந்தேதீரும்
இந்த உயிரை மட்டும் உரிமை கொண்டு
மாய்க்க எப்படி முடியும்.
வாழ்வதில் தோற்றால் போட்டியாக
மூவர் தயார் நிலையில் வாழ்ந்து காட்ட.
வாளை தடுக்க கேடையமே பதில் தவிர இன்னொரு வாள் இல்லை,
வாழ் முடிவு வரை........
விலையுர்ந்த காலனிக்கு ஆசைப்பட்டவன் கால் இல்லாதவனைக் கண்டதும் திருந்துவதைப்போல , உனக்கும் ஒரு வழி உண்டு.
பிறப்பு - இறப்பு விகிதம் 3:1 இல் இருக்கும் நிலையில், இறப்புகளால் இதை சரிக்கட்ட முடியாது .......
நன்றி,
நட்புடன்
கணபதி...
Comments
Post a Comment