இயல்பாய் எனைப் பிரிந்து உன் வழிப்பயணம்
செய்கிறாய், இங்கே என் இரண்டாம்
இதயம் கூட என் காதலுக்கு இறுதிச்சடங்கு
நடத்தி விட்டது.
காற்றடிக்கும் போது களைந்து உன் தலைமுடி,
உன் கண்ணிமை தாண்டி கண்களை
கலங்க வைக்கும் நேரம் கூட என் குருதி ஓட்டம்
நின்றுவிடும், ஏன் தெரியுமா ?
என் கண்கள் ஓரம் வரும் நீர்த்துளிகள் கூட
உன்னை பாதிக்க கூடாது என்று.
அன்று சுதாரிப்புகள் கூட சுகம் தரும்
கண்ணே உன்னை சுமந்து செல்கையில்.
ஆனால் இன்று பிரிவு முள் தீண்டியதால்
உறைந்துவிட்டது என் குருதி.
கனவில் நான் புலம்பிய இலக்கணப் பிழைகள் யாவும்
கனவிலும் உன் பெயரையே உச்சரிக்கிறேன்
என்று அர்த்தங்கள் சொன்னது.
நன்றி,
நட்புடன்
கணபதி...
Comments
Post a Comment