
கண்களில் தொடங்கி
கன்னத்தில் வழிந்து
இதழ்களில் தேங்கும்
உன் வெட்கத் திருவிழாவில்
நான் தொலைந்து போய்விட்டேனடி...
எப்படியாவது என்னைக் கொஞ்சம்தேடி
எடுத்துக் கொஞ்சேன்...
இறுக்கி இறுக்கிஅணைத்துக் கொள்கிறாய்
என்னை உன் நினைவுகளில்நேரில் வந்தால் மட்டும்
அதே இறுக்கத்தோடுஅணிந்து கொள்கிறாய்
உன் வெட்கத்தை...இன்று மட்டுமாவது
உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு
உன் இதழின் ஈரத்திலேயே
விழித்துப் பழகி விட்டேன்
இப்படி ஊடல் என்ற பெயரால்
எனக்கு உறக்கமும் விழிப்பும்
இல்லாமல் செய்து விட்டாயடி...
உன் சிணுங்கல் ஒலியில் தானே
தினமும் தொடங்குகிறது
நமது முத்தப் போர்
உன் வெட்கத்தை வெல்லாமல்
என்றும் முடியப்போவதில்லை
நான் உனக்கு
ஒரு முத்தம் தருவேன்
அதே போல் பாடத்தை
சரியாகச் செய்யும் போது
நீ எனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும்
என்று சொன்னதற்காக
இப்போதெல்லாம்
தவறுகளை மட்டுமே
சரியாகச் செய்கிறாயடி...
கடந்து வந்திருக்கிறேன்
நீ என்னவென்றால்கன்னத்தில் கொடுக்கிறாயடி
உன் முத்தத்தை...கன்னத்திற்கும் உதட்டுக்கும்
என்னஇருபது மைல் தூரமா இருக்கிறது...?
இன்னும் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
முடியாமலா போய்விடும் உன் இதழ்களால்..........
நன்றி,
நட்புடன்
கணபதி...
Comments
Post a Comment