கண்களில் தொடங்கி கன்னத்தில் வழிந்து இதழ்களில் தேங்கும் உன் வெட்கத் திருவிழாவில் நான் தொலைந்து போய்விட்டேனடி... எப்படியாவது என்னைக் கொஞ்சம் தேடி எடுத்துக் கொஞ்சேன்... இறுக்கி இறுக்கி அணைத்துக் கொள்கிறாய் என்னை உன் நினைவுகளில் நேரில் வந்தால் மட்டும் அதே இறுக்கத்தோடு அணிந்து கொள்கிறாய் உன் வெட்கத்தை... இன்று மட்டுமாவது உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ... முத்தச் சத்தத்திலேயே உறங்கி உன் இதழின் ஈரத்திலேயே விழித்துப் பழகி விட்டேன் இப்படி ஊடல் என்ற பெயரால் எனக்கு உறக்கமும் விழிப்பும் இல்லாமல் செய்து விட்டாயடி... சங்கொலி கேட்டுத் தொடங்கும் போர் போல உன் சிணுங்கல் ஒலியில் தானே தினமும் தொடங்குகிறது நமது முத்தப் போர் உன் வெட்கத்தை வெல்லாமல் என்றும் முடியப்போவதில்லை இந்தக் காதல் போர்... ஒவ்வொரு முறையும் பாடத்தில் தவறு செய்யும் போது ...
வார்த்தைகளோ வாக்கியங்களோ... எதுவும் நிறைத்து விடுவதில்லை.. உள்ளத்தை...!!உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசாத தருணங்களை..... மௌனமாக நேசித்துக்கொண்டே இருக்கிறேன் என் மனதோடு (காதல் )மழைக் காலத்தில்...!! சாரல் ஓய்ந்த பின்னும் என் மனம் மட்டும் ஈரமாய்...!!!