Skip to main content

Posts

யாரும் பார்க்கவில்லை

என் முகம் அழகாயில்லை என ஏன் தினம் தினம் அலுத்துக்கொள்கிறாய்? பூக்கள் எப்படியிருந்தாலும் அழகுதான் போடா இப்பொழுதெல்லாம் நீ திட்டினால் கூட எனக்கு கோபமே வருவதில்லை என செல்லமாக நீ உதடு சுழித்தபோது ஏற்பட்ட சுழலில் அமிழ்ந்து போனது என் கோபம் நீ பேசப்போவதில்லை என பறை சாற்றுவதுக்கு இப்படி 1000 SMS அனுப்பி என்னைப் படுத்துவதற்கு பதில் என்னிடம் நீ பேசித்தொலைத்திருக்கலாம் என் முன்னால் இப்படி இனி ஐஸ்கீரீம் சாப்பிடாதே எனக்கும் இப்போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது உன் இதழ்களின் க்ரீமை நல்லவேளை நீ வெட்கப்படும்போது என்னைதவிர யாரும் பார்க்கவில்லை அப்புறம் அவனவன் உன்னை காதலிக்க ஆரம்பித்து விடுவான் எல்லாரும் பார்க்கிறார்கள் சும்மா இரு என சொல்கிறாய் யாரும் இல்லாத இடத்தினில் வந்தாலோ யாரும் பார்த்து விட போகிறார்கள் சும்மா இரு என்கிறாய் நன்றி, நட்புடன் கணபதி...
Recent posts

கொஞ்சும் இன்பம்...

எனக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாதவளாக இருந்தேன் உன் மீசை குத்தும் வரை கொஞ்சம் என்னை திட்டு என்னை திட்டிவிட்டு நீ கெஞ்சுவதைப்போல் கொஞ்சுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது இப்பொழுதெல்லாம் நான் அடிக்கடி அழகாக வெட்கப்படுகிறேனாம் சொல்கிறார்கள் என் தோழிகள் ! நீ தொலைபேசி வழியே என்னுடன் பேசும்போது கூட சும்மா இருந்தால் தானே ? உன்னைபோலவே இந்த காற்றும் சும்மாவே இருப்பதில்லை பார் என் மேலாடையை சும்மா விடுகிறதா ? முன்பெல்லாம் உன்னுடன் எந்தப்பெண் பேசினாலும் கவலைப்படாத நான் இப்பொழுதெல்லாம் நீ உன் அம்மாவிடம் பேசினால் கூட பொறாமைப்படுகிறேன் வர வர உன் குறும்புக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது நான் வேண்டாம் என்றாலே உடனே அதை செய்ய ஆரம்பித்துவிடுகிறாய். என் மனதில் நீதாண்டா இருக்கிறாய் என ஏன் தான் சொன்னேனோ எங்கே காட்டு என இப்படி என் உடை கலைத்தால் எப்படி ? நீ ஒரு பொறுக்கி என்று திட்டினால் கூட ‘ஆமாம்! என்னைப்பார்த்து சிதறிக்கிடந்த உன் இதயத்தான் பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய் ச்சீய் போடா பொறுக்கி !!! ஏன் இப்படி கூறி என் வெட்...

இன்னும் சில முத்தங்கள்...

கண்களில் தொடங்கி கன்னத்தில் வழிந்து இதழ்களில் தேங்கும் உன் வெட்கத் திருவிழாவில் நான் தொலைந்து போய்விட்டேனடி... எப்படியாவது என்னைக் கொஞ்சம் தேடி  எடுத்துக் கொஞ்சேன்... இறுக்கி இறுக்கி அணைத்துக் கொள்கிறாய் என்னை உன் நினைவுகளில் நேரில் வந்தால் மட்டும் அதே இறுக்கத்தோடு அணிந்து கொள்கிறாய் உன் வெட்கத்தை... இன்று மட்டுமாவது உன் வெட்கத்தை அவிழ்த்துவிட்டு என் முத்தத்தை அணிந்து கொள்வாயா நீ... முத்தச் சத்தத்திலேயே உறங்கி உன் இதழின் ஈரத்திலேயே  விழித்துப் பழகி விட்டேன் இப்படி ஊடல் என்ற பெயரால் எனக்கு உறக்கமும் விழிப்பும் இல்லாமல் செய்து விட்டாயடி... சங்கொலி கேட்டுத் தொடங்கும் போர் போல உன் சிணுங்கல் ஒலியில் தானே  தினமும் தொடங்குகிறது நமது முத்தப் போர் உன் வெட்கத்தை வெல்லாமல் என்றும் முடியப்போவதில்லை இந்தக் காதல் போர்... ஒவ்வொரு முறையும்  பாடத்தில் தவறு செய்யும் போது ...

பின் எப்படி பார்ப்பதாம்?

உன்னை முதன் முதலில் அந்த மாம்பழ நிற பட்டுப்பாவாடையில் பார்த்ததும் எனக்குத்தோன்றியது தேவதைகள் வெள்ளை உடைகளில் தான் வரவேண்டுமா என்ன ? கோவிலுக்கெல்லாம் இப்படி வராதே பார் வருபவர்களெல்லாம் உன்னைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள் முதலில் இப்படி பார்ப்பதை விடு என்கிறாய் கர்ப்பகிரகத்துக்குள் இருக்கும் என் தெய்வத்தை பின் எப்படி பார்ப்பதாம் ? இப்பொழுதெல்லாம் கோவிலுக்கு தவறாமல் வருகிறேன் எனக்கு பக்தி வந்து விட்டதென என் அம்மா மிகுந்த ஆனந்தப்படுகிறார்கள் பாவம் அவர்களுக்கு தெரியாது என் பக்தி கர்பகிரகத்துக்குள்ளிருக்கும் அம்மனுக்காக அல்ல அதைச் சுற்றிக் கொண்டிருக்கும் அம்மனுக்காக என! அப்படிப் பார்க்காதே எனக்கு வெட்கமாக இருக்கிறதென முகத்தினை திருப்பிக் கொள்கிறாய் இருப்பினும் என்னை நோக்கி சிரிக்கிறது எனக்கான உன் உன் வெட்கம் ! அன்று என் எதிர் வீட்டு குழந்தையை நீ கொஞ்சிக்கொண்டிருந்த போதுதான் தவழ ஆரம்பித்தது உன்னை நோக்கி என் மனது ! நம் பயணத்தில் திடீரென குறுக்கே வந்துவிட்ட அந்த மிதி வண்டிக்காரனை என்னால் திட்ட முடியவில்லை வாழ்த்தத்தான் தோன்றுகிறது நீ என் பின்னால் அமர்திருக்கும் வேளைகள...

கள்ளினும்...

நீதான் குடித்திருக்கிறாயே எதில் அதிகம் ‘கிக்’ ? என ஒருபக்கம் தலையை சாய்த்து கேட்ட போது ஏறியது போதை எனக்கு நானும் உன்னுடன் ‘பாரு’க்கு வருகிறேன் என ஏன் அழிச்சாட்டியம் செய்கிறாய்? வெளியிலிருந்து மது கொண்டுவர அங்கே அனுமதி இல்லை எனக்கூறியும் ? ஒரேயொரு ‘சிப்’ குடித்தால் போதையேருமா என கேட்கிறாய் அதெல்லாம் உன் இதழ் ’கள்’ குடித்தால் மட்டுமே சாத்தியம் ! முத்தமிட்டுவிட்டு பார்ட்டிக்கு போய் குடிச்சிட்டு வருவீங்களா ? என ஒன்றுமே தெரியாதவள் போல் கேட்கிறாய் ! ஏற்கனவே போதையேற்றிவிட்டு என்ன இது கேள்வி ? ஏங்க இப்போ நீங்க போகத்தான் வேணுமா ? என கொஞ்சலாக கேட்கிறாய். இப்படி கேட்டுக்கேட்டே எனக்கு போதையேற்றி விடுகிறாய் இனி எப்படிச்செல்ல ‘பார்’ருக்கு ? இந்த ‘கள்’ எப்படி சுவைக்கும் என கேட்கிறாய் கள்ளி! உன் இதழிலேயே வைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவள் போல.. நன்றி, நட்புடன் கணபதி...

இல்லாத பொழுதுகள்

நீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவதற்குள் என்னைவிட்டு விட்டு ஓடிப்போனால் எப்படி ? உன்னை காதலித்ததற்கு பேசாமல் ஒரு கழுதையை காதலித்திருக்கலாம் என கூறுகிறாய் நானும் உன் நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் கழுதைதான் ! நான் தாடி வைத்தால் சகிக்காது என நீதானே கூறியிருக்கிறாய் அதற்காகவாவது என்னிடம் பேசிவிடேண்டி ! பேசிக்கொண்டாவது இருந்திருக்கலாம் பேசிக்கொடுத்த தொல்லையைவிட உன் நினைவுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இனி உன்னிடம் பேசப்போவதில்லை என கூறிவிட்டு நீ மட்டும் சென்றுவிட்டால் எப்படி கூடவே உன் நினைவுகளையும் கூட்டிக்கொண்டு போய்விடு அவைகளின் அழிச்சாட்டியம் தாங்கமுடியவில்லை ! ஏன் என்னிடம் பொய் சொன்னாய் எனக் கேட்டு சண்டை போடுகிறாய் நீ அழகாய் இருப்பதாய் கூடத்தான் சொன்னேன் அப்போது மட்டும் ரசித்தாயே ! நிறைய நேரம் கிடைக்கிறது இப்போதெல்லாம் நம் நினைவுகளை அசை போடுவதற்கு ஊடல் வாழ்க ! தொலைக்க நினைத்தாலும் என்னுடனே ஒட்டிகொண்டிருக்கிறன உன் நினைவுகள் ஈரமான கடற்கரை மணலைப்போலே நன்றி, நட்புடன் கணபதி...

உனக்காக மட்டும்....

உன்னிடம் எனக்கு மிகவும் பிடித்ததை நான் சொன்னபோது உன் முகம்போன போக்கையும் கை போன போக்கையும் காண கண்கோடி வேண்டுமடி... நான் பார்க்கும்போது வெளிப்படும் வெட்கங்களையும் மற்றவைகளையும் நீ மறைக்கபடும் பாடு இருக்கிறதே உன் வெட்கங்களைவிட அவை மிக அழகாக இருக்கின்றன... முத்தம் கொடுக்க வெட்கமாக இருக்கிறதென சாக்கு சொல்லித்திரிகிறாயே நான் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்கிறேன் அப்பொழுதாவது கொடுத்துத்தொலையேன்... ஏதோ நீ கேட்டதால் தானே சொன்னேன் அதற்காக இனி என் முன்னே நடக்கவே மாட்டேன் என ஏணடி அடம்பிடிக்கிறாய்..? அப்படி முறைக்காதேடி... நிஜமாகவே ரகசியம் சொல்லத்தான் கூப்பிட்டேன்.. காதுக்குள் நிற்க இடமில்லாமல் தானாகவே வழுக்கி கன்னத்தில் விழுந்துவிட்டன என் இதழ்கள் ஏதோ வழிதெரியாமல் தெரியாத்தனமாக உன் இதழருகில் வந்துவிட்டது போல எப்படி நடிக்கின்றன பார் என் இதழ்கள் ?! உன் இதழ்களால் அவைகளை நன்றாக புரட்டி எடு.. வருவியா வருவியா என... ஒன்றேயொன்று கொடுக்கவே யோசித்தவள் நீதானா என திக்குமுக்காடிப் போனேன் உன் உதடுகளின் வேகம் கண்டு... போடா .. நீ அருகில் வர வர நான் விலகிபோகலாம் என்றால் என் வெட்கங்கள்தான் விலகிப்போய்கொண்டே இருக்க...