Skip to main content

Posts

Showing posts from 2016

யாரும் பார்க்கவில்லை

என் முகம் அழகாயில்லை என ஏன் தினம் தினம் அலுத்துக்கொள்கிறாய்? பூக்கள் எப்படியிருந்தாலும் அழகுதான் போடா இப்பொழுதெல்லாம் நீ திட்டினால் கூட எனக்கு கோபமே வருவதில்லை என செல்லமாக நீ உதடு சுழித்தபோது ஏற்பட்ட சுழலில் அமிழ்ந்து போனது என் கோபம் நீ பேசப்போவதில்லை என பறை சாற்றுவதுக்கு இப்படி 1000 SMS அனுப்பி என்னைப் படுத்துவதற்கு பதில் என்னிடம் நீ பேசித்தொலைத்திருக்கலாம் என் முன்னால் இப்படி இனி ஐஸ்கீரீம் சாப்பிடாதே எனக்கும் இப்போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது உன் இதழ்களின் க்ரீமை நல்லவேளை நீ வெட்கப்படும்போது என்னைதவிர யாரும் பார்க்கவில்லை அப்புறம் அவனவன் உன்னை காதலிக்க ஆரம்பித்து விடுவான் எல்லாரும் பார்க்கிறார்கள் சும்மா இரு என சொல்கிறாய் யாரும் இல்லாத இடத்தினில் வந்தாலோ யாரும் பார்த்து விட போகிறார்கள் சும்மா இரு என்கிறாய் நன்றி, நட்புடன் கணபதி...