Skip to main content

Posts

Showing posts from August, 2011

உனக்கான நானும்... எனக்கான நீயும்...

சின்னவயது உடைகளோ சின்னதான உடைகளோ தூக்கிப்போடாதேடி உனக்கு வேண்டுமானால் அவை சின்னதான உடையாக இருக்கலாம் ஆனால் எனக்கு அவை காதல் சின்னமான உடைகள் தெரியுமா..? ச்சீய் இப்படியெல்லாமா ரசிப்பாய் என என்ன நீ சாதாரணமாகக் கேட்கிறாய்..? நீ ச்ச்சீய் சொல்லும் அழகுக்கு முன் எவளுமே நிற்க முடியாது தெரியுமா..? ஹய்யோ போடா எனக்கு வெட்கமா இருக்கு என நீ சொல்ல சொல்ல உன்னிடம் ஊற்றெடுக்கும் வெட்கங்களை பருகவே விளைகிறேன் தெரியுமா..? ஏற்கனவே அழகாக இருக்கும் உன்னை மேலும் அழகாகக்கத்தான் உன்னை வெட்கப்படுத்துகிறேன் தெரியுமா..? இனிமேல் கண்ட இடத்தில் எல்லாம் தொடாதே என சொல்கிறாய் அப்போ யாரும் காணாத இடத்தில் என்றால் சரியாடி..? உன்னிடம் வழிந்துகொண்டிருக்கும் வெட்கங்களையெல்லாம் பருக பருக எனக்கு மேலும் தாகமெடுக்கிறது தெரியுமாடி ? ஒரேயொரு முத்தம் கொடுக்க எப்படியெல்லாம் கெஞ்ச விடுவாய் ? உன்னைப் போல நான் கஞ்சன் இல்லை என நிரூபிக்க போகிறேன் பார்.. தயாராக இருடி.. கொடுக்க கொடுக்க வளரும் செல்வம் கல்வி மட்டும் அல்ல என் செல்லமே.. உன் முத்தமும் தான்... ஹய்யோ வேணாம்டா ப்ளீஸ் என நீ சொன்னாலே வேணும்டா ப்ளீஸ் என நான் அர்த்தம் பண்ணிக் கொள்கிற...

" பிரியத்தோடு நீ.. பிரிவோடு நான்... "

அம்மா.. அமைதியின்  போர்வைக்குள் ஒளிரும்  அன்பின் விலாசம் நீ.. எவ்வளவோ  எழுதியிருக்கிறேன் ஆனால் இன்று வரை எழுதியதில்லை  உன்னைப் பற்றி எதுவும்.. உன்னில்  கருவாகி உருவாகி உனதுதிரத்தால்  உயிர் சுமந்து இப்படி  பிரிந்து நிற்பேன் என்றறிந்திருந்தால் பிறவாமலே  இருந்திருப்பேன்.. நான்  துயில் துறந்து  விழிக்கும்  ஒவ்வொரு நாளிலும் என் முன் நிற்பாயே.. இப்போது  உனை  பாராமல் இருக்கிறேன் நிதமும்.. சிறுவயதின் அழுகையில் ஏனென்று கேளாமலே அரவணைத்து எனதழுகை நிறுத்துவாயே.. இப்போது  மௌனமாக  மனதிற்குள் அழுகிறேன்  உன் அரவணைக்கும்  கைகளை தேடுகிறேன்.. . மழலையில் வார்த்தைகள்  புரியாத போதும் நீ மட்டும் புரிந்ததாய் தலை சரித்து  சிரித்துக் கொஞ்சுவாயே.. இப்போது  பேசுவதற்கு கூட  வார்த்தகள் தேடுகிறேன்..  . தோளில் சாய்த்து  நான் கண்ணுறங்க  நீ விழித்திருப்பாயே.. இப்போது நாட்கள் கடந்து தூக்கம் மறந்து நிற்கிறேன்.. என் பசியறிந்து பசியாற்றிய காலங்கள் நீ பசிமறந்து நின்ற  நினைவுகளை நிறுத்துகிறது நெ...

கொஞ்சம் கொஞ்சேன்....

கொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..?? நான் நல்லா இருக்கிறேனா இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா எனக் கேட்கிறாய்.. இரண்டுபேருமே சேர்ந்திருந்தாலும் அழகுதான் சேராமலிருந்தாலும் அழகுதான் எனச் சொன்னால் ஏண்டி அடிக்க வருகிறாய் ...?? என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும் என நீ தானே கேட்டாய்...?? சொல்லவா இல்லைக் காட்டவா எனச் சொன்னதற்குப் போய் இப்படிக் கிள்ளுகிறாயே ராட்சசி... ஹய்யோ உன்னைப் போய் எந்த லூசுடா காதலிப்பா... எனக் கேட்கிறாய் நீ என்னவோ பெரிய அறிவாளி என நினைத்துக்கொண்டு... ஒரேயொரு முத்தம் கொடுடி என இனியும் உன்னைக் கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்.. தேவையில்லாமல் என்னைத் திருடனாக்காதே... உன்னைக் கெஞ்சக் கெஞ்ச ரொம்பத்தான் மிஞ்சுகிறாய் நீ.. என்னடா நினைத்துக்கொண்டிருக்கிறாய் எனக்கோபமாகக் கேட்கிறாய் உன்னைத்தான் என்ற உண்மை உணராமல்... என்னை விட்டுத்தொலையேன் என நீ கோபமாகச் சொல்லிச்சென்றால் எப்படி..? விட்டுத்தான் தொலைத்துவிட்டேன் என்னை உன்னிடம்... உன்னைக் காதலித்ததால்தான் நான்கவிதை எழுதிக்கொண்டிருப்பதாய் என எல்லோரும் சொல்கிறார்கள...

அப்பா...

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என... கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்..? லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்... அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..? எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார...

பொறாமையாக இருக்கிறது....!

நீ பரீட்சை எழுதும்போது யோசிப்பாயே....! அந்த முகத்தை ரசிக்கவே நானும் உன் வகுப்பில் படிக்க விரும்புகிறேன்....! நீ மனப்பாடம் செய்யும்போது உன் இதழ் முனுமுனுக்கும்மே...! அந்த நிமிடங்களை ரசிப்பதர்காகவே உன்னை காதலிக்க வேண்டும்...! நீ படிக்கும்போது நெஞ்சில் வைத்திருக்கும் புத்தகத்தின்  மீது பொறாமையாக இருக்கிறது....! நீ எழுதும்போது உன் விரல்களுக்குள் சிக்கிக்கொண்ட பேனவாகவே இருக்கிறது என் காதலும் உன்னுள்....! நீ மென்பொருள் படிக்கிறாய் .......! நான் உன்பொருள் படிக்கிறேன்......! இருவரின் மெய்பொருள் காண்பதே காதல்.....! நன்றி, நட்புடன் கணபதி...

இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...?

என்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொண்டிருக்கையில் தேவை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தை என்ன செய்யலாம்..? அதற்கும் ஒரு முத்தம் கொடுத்து அணைத்து விடட்டுமா உன்னைப் போலவே..? இவ்வளவு இறுக்கமான அணைக்காதேடா எனக்கு மூச்சுத்திணறுகிறது எனக் கொஞ்சலாகச் சொல்கிறாய்... உனக்காவது பரவாயில்லை உன் கொஞ்சல் கேட்டாலே எனக்கு மூச்சுத்திணறுகின்றதடி குட்டிபிசாசே... சரியான திருடண்டா நீ என சொல்கிறாய் அடிபாவி... உன்னிடம் திருடிய முத்தங்களை உன்னிடம் தானே கொடுக்கிறேன்.. இதற்கே இப்படி திருட்டுப்பட்டம் கட்டினால் அப்புறம் கொள்ளைக்காரனாகிவிடுவேன் ஜாக்கிரதை... இரவுகள் எல்லாம் தீர்ந்த பின்னும் பேசிக்கொள்ள நமக்கு என்னெல்லாமோ இருக்கின்றன... ஆனாலும் சலிப்பதேயில்லை நிறுத்தவும் மனதேயில்லை உன் கொஞ்சலான முத்தங்களைப்போல... காலமெல்லாம் காதலோடு இருந்துவிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் உன்னை சந்திக்கும் வரை... எப்பொழுதும் உன் அணைப்புக்குள் இருக்கவேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்குக் கிடையாது... உன் கழுத்துச் சங...

உன்னிடம் மயங்குகிறேன்...

உன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் நீ எனக்குத்தான் என சொல்லி சண்டையிடும் போது மேலும் மேலும் அழகாக இருக்கிறாய் செல்ல குரங்கே... எனக்கு ஒரு சந்தேகம் செல்லம் உன்னை விதம் விதமாக கொஞ்சவேண்டும் என்றுதானே என்னிடம் விதவிதமான காரணங்களோடு சண்டையிடுகிறாய்..? நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு அதன் மதிப்பு தெரியவில்லை.. இனி உன்னைக் கெஞ்சப்போவதில்லை.. தூக்கிக் கொஞ்சப்போகிறேன்.. அப்போது தெரியும் பார்.. நம்மைப் பற்றி அவுக பேசறாக இவுக பேசறாக என நீ கோபமாக சொல்லும்போது எனக்கு கோபம் வராமல் சிரிப்புதான் வருகிறது... சரிடி செல்லம்... "ஏன் இந்த மூக்கு உனக்கு இப்படி சிவந்திருக்கு...?" இப்பொழுது கன்னங்களும் சிவக்க ஆரம்பிக்கின்றன.... எப்பொழுது கவிதை எழுத போகிறாய் என நீ ஒவ்வொரு முறையும் கேட்கும் போதுதான் உணர்கிறேன் கவிதையை எழுதவேண்டும் பேசவிடக்கூடாது என... நானும் நீயும் பேசிக்கொள்ளாமல் இருந்த போது என்ன செய்தாய் கவிதை எழுத எனக் கேட்டாய் சொன்ன பதிலைக் கேட்டு கோபமும் வெட்கமும் கலந்து நீ சொன்ன ...